சிறப்பு பிரம்மதேய மண்டலங்கள் (eBook)
43 Seiten
Logital Media (Verlag)
978-0-00-012241-4 (ISBN)
தமிழர்களை சுரண்டும் இந்திய பார்ப்பன தேசிய பன்னாட்டு கொள்ளை விளக்க பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கிற பெரியார் திராவிடர் கழகத்தினுடைய மாவட்ட தலைவர் அருமைத் தோழர் ரசீத்கான் அவர்களே, கூடியிருக்கின்ற தோழர்களே, சகோதரிகளே, கூட்டத்தினுடைய தலைப்பை நாங்கள் தேர்வு செய்த நேரத்தில் தமிழ்நாட்டின் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நாங்கள் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்துகிற ஒரு சூழலில் எல்லோரும் எங்களை பார்த்து கேட்டுகிற ஒரு கேள்வி பெரியார் திராவிடர் கழகம் இந்த தேர்தலில் யாரை ஆதரிக்கப் போகிறது?
தமிழர்களை சுரண்டும் இந்திய பார்ப்பன தேசிய பன்னாட்டு கொள்ளை விளக்க பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கிற பெரியார் திராவிடர் கழகத்தினுடைய மாவட்ட தலைவர் அருமைத் தோழர் ரசீத்கான் அவர்களே, கூடியிருக்கின்ற தோழர்களே, சகோதரிகளே,
கூட்டத்தினுடைய தலைப்பை நாங்கள் தேர்வு செய்த நேரத்தில் தமிழ்நாட்டின் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நாங்கள் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்துகிற ஒரு சூழலில் எல்லோரும் எங்களை பார்த்து கேட்டுகிற ஒரு கேள்வி பெரியார் திராவிடர் கழகம் இந்த தேர்தலில் யாரை ஆதரிக்கப் போகிறது? இந்த கேள்வி தான் இப்போது பலராலும் கேட்கப்படுகிற ஒரு கேள்வியாக இருக்கிறது. பல பத்திரிக்கைகள், தொலைக் காட்சிகள், ஊடகங்கள் எல்லாவற்றிலுமே இப்போது அன்றாடம் வந்து கொண்டிருக்கிற செய்திகள் யார் யாருடன் கூட்டணி யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஜப்பான் நாட்டிலே ஒரு மிகப்பெரிய சுனாமி அடித்து வீழ்த்தினாலும் கூட அந்த சுனாமியினுடைய தாக்கத்தையும் மிஞ்சுகிற அளவுக்கு இங்கே தேர்தல் கூட்டணி பற்றிய இடஒதுக்கீட்டை பற்றிய பேச்சுக்கள் தான் இங்கே மிகத் தீவிரமாக பரபரப்பாக இங்கே நடந்து கொண்டிருக்கிற ஒரு சூழ்நிலை. தமிழ்நாட்டு மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் தங்களுடைய வாழ்க்கை பிரச்சனைகளுக்கு தங்களது வாழ்வுரிமைகளுக்கு தங்களுக்கு கிடைக்க வேண்டிய சமூக நீதிகளுக்கு தங்களுக்கு கிடைக்க வேண்டிய நதிநீர் உரிமைகளுக்கு எல்லாவற்றிற்குமான ஒரு தீர்வு ஐந்தாண்டுகளுக்கு வரக்கூடிய ஒரு தேர்தலில் இருக்கிறது என்று அவர்கள் கருதிக்கொண்டு ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு இந்தியாவிலே ஆண்டு கொண்டிருக்கிற ஆட்சிகள் இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தை, கனிம வளத்தை, நாட்டினுடைய மக்கள் ஆற்றலை ஒரு மகத்தான சுரண்டலுக்கு உட்படுத்தி பன்னாட்டு நிறுவனங்களுடைய கூட்டுக் கொள்ளைக்கு கதவு திறந்துவிட்டு அமெரிக்காவினுடைய கட்டுப் பாட்டிலே இருக்கிற உலக வங்கி, சர்வதேச நிதியம் என்கின்ற அந்த நிறுவனங்களுடைய ஆணைகளுக்கு அடிபணிந்து இந்த நாட்டை எப்படி சுரண்டிக் கொண்டிருக்கிறார்களோ அதைப்போல எகிப்திலும், துனிசியாவிலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலே இருக்கிற உலக வங்கியும், சர்வதேச நிதியமும் பன்னாட்டு சுரண்டல்களும் அங்கே மக்களை சுரண்டி கொழுத்த காரணத்தால் தான் மக்களுடைய வாழ்க்கை, பொருளாதார வாழ்க்கை மிகப்பெரிய அளவிற்கு ஒரு நெருக்கடிக்கு தள்ளப்பட்டு அந்த நெருக்கடியின் காரணமாகத் தான் இன்றைக்கு மக்கள் புரட்சி அங்கே வெடித்து கிளம்பியிருக்கிறது என்பதை கோடிட்டு நாம் கவனத்திலே கொண்டாக வேண்டும். ஒரு இணையதளம் 30 சதவீத மக்கள் தங்களுக்குள்ளே ஒரு இணையதளத்தை உருவாக்கிக் கொண்டு அந்த இணைய தளத்தின் வழியாக செய்திகளை பறிமாறிக் கொண்டு மக்களை புரட்சிக்கு தயார் செய்கின்ற ஒரு பெரிய பணியை அங்கே நடத்தி முடித்திருக்கிறார்கள்.
உலக அடிப்படைகள் இன்றைக்கு இந்த சர்வதேச பன்னாட்டு கூட்டுக் கொள்ளைக்கு எதிராக இந்த பொருளாதார கொள்கைகள் தொடர்ச்சியாக நீடிக்கும் என்று சொன்னால் அது மக்களை மிகப்பெரிய ஒரு அளவிற்கு கடுமையாக ஒரு பாதிப்புக்கு உள்ளாக்ககூடிய ஒரு ஆபத்துகள் அதில் இருக்கிறது ஒரு கட்டத்தில் மக்கள் அதை எதிர்த்து போரர்டுவார்கள், வீதிக்கு வருவார்கள் என்பதை தான் எகிப்து, துனிசியா மற்ற நாடுகளிலே நடக்கின்ற தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் இன்றைக்கு நமக்கு ஒரு பாடமாக இருந்து கொண்டிருக்கின்றன். அதே வரிசையில் இன்று நாம் இந்தியாவை பார்க்க வேண்டியிருக்கிறது. இந்தியாவை எடுத்து கவனித்து பார்க்க வேண்டியிருக்கிறது.
ஊழலை பற்றி இன்று ஊடகங்கள் எழுதுகிறார்கள். இந்தியாவிலே ஊழல் மிக அதிகமாகிவிட்டது. ஊழல் சத்திகள் பெருகிவிட்டன. ஊழலை நாங்கள் அம்பலப்படுத்துகிறோம் என்று சொல்லுகிறார்கள். ஆனால் ஊழலுக்கான ஊற்றுக்கண் எங்கியிருந்து வருகிறது? ஊழலுக்கான கொள்கை எதிலிருந்து இறக்குமதியாகிறது? என்பது தான் ஊழல் என்பதைவிட இன்றைக்கு மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு கேள்வி. ஊழல் இன்று சட்டபூர்வமாக மாற்றியிருப்பது என்னவென்று சொன்னால் இந்தியாவிலே இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிற பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் இந்தியாவை சுரண்டுவதற்கு அனுமதித்து கொண்டிருக்கிற இந்த நாட்டிலே நடத்திக் கொண்டிருக்கிற ஆட்சியாளர்கள் அது...
| Erscheint lt. Verlag | 1.11.2018 |
|---|---|
| Sprache | Tamil |
| Themenwelt | Kunst / Musik / Theater ► Malerei / Plastik |
| ISBN-10 | 0-00-012241-6 / 0000122416 |
| ISBN-13 | 978-0-00-012241-4 / 9780000122414 |
| Informationen gemäß Produktsicherheitsverordnung (GPSR) | |
| Haben Sie eine Frage zum Produkt? |
Größe: 374 KB
Kopierschutz: Adobe-DRM
Adobe-DRM ist ein Kopierschutz, der das eBook vor Mißbrauch schützen soll. Dabei wird das eBook bereits beim Download auf Ihre persönliche Adobe-ID autorisiert. Lesen können Sie das eBook dann nur auf den Geräten, welche ebenfalls auf Ihre Adobe-ID registriert sind.
Details zum Adobe-DRM
Dateiformat: EPUB (Electronic Publication)
EPUB ist ein offener Standard für eBooks und eignet sich besonders zur Darstellung von Belletristik und Sachbüchern. Der Fließtext wird dynamisch an die Display- und Schriftgröße angepasst. Auch für mobile Lesegeräte ist EPUB daher gut geeignet.
Systemvoraussetzungen:
PC/Mac: Mit einem PC oder Mac können Sie dieses eBook lesen. Sie benötigen eine
eReader: Dieses eBook kann mit (fast) allen eBook-Readern gelesen werden. Mit dem amazon-Kindle ist es aber nicht kompatibel.
Smartphone/Tablet: Egal ob Apple oder Android, dieses eBook können Sie lesen. Sie benötigen eine
Geräteliste und zusätzliche Hinweise
Buying eBooks from abroad
For tax law reasons we can sell eBooks just within Germany and Switzerland. Regrettably we cannot fulfill eBook-orders from other countries.
aus dem Bereich